Home உலகம் சீனாவில் பறவைக் காய்ச்சல்அபாயம்

சீனாவில் பறவைக் காய்ச்சல்அபாயம்

by Jey

கொவிட் பெருந்தொற்று காரணமாக உலகம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில்,
சீனாவில் முதன் முறையாக, கோழிப் பண்ணைகளில் இருந்து பரவும் வைரசால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரைச் சேர்ந்த ஒருவர், ‘எச்10என்3’ வைரஸ் தாக்குதலால் உண்டாகும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் உள்ளதாக, சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கோழிப் பண்ணையில் இருந்து பரவும் வைரசால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். முதன் முதலாக இத்தகைய வைரஸ், மனிதரை பாதித்துள்ளது. இதற்கு முன் உலகில் வேறு எங்கும் இந்த வகை வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இது குறைந்த வீரியமுள்ள, அதிவேகமாக பரவ வாய்ப்பில்லாத வைரஸ்.

பறவை காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக, கோழிப் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு இத்தகைய வைரஸ் தாக்குதல் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

related posts