Home கனடா பழங்குடியின சிறுவர்கள் கூட்டுப்படுகொலைகளுக்கு கனடாவே பொறுப்பு – ட்ரூடே

பழங்குடியின சிறுவர்கள் கூட்டுப்படுகொலைகளுக்கு கனடாவே பொறுப்பு – ட்ரூடே

by Jey

பழங்குடியின சிறுவர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனடாவெ பொறுப்பு என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்லூப்ஸில் 200க்கும் மேற்பட்ட சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூகத்தின் உயர் நிலைக்கு வந்திருக்க வேண்டியவர்கள் எனவும் இதற்கான பொறுப்பினை கனடா ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து சித்திரவதை செய்யப்பட்டிருக்கக் கூடாது என அவர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

காம்லூப்ஸ் வதிவிட பாடசாலையில் 215 சிறார்களின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

related posts