எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் ஒன்றாரியோவில் பாடசாலைகள் திறக்கப்படாது மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நேரடியாக கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த கல்வியாண்டில் நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையுடன் நடாத்தப்பட்ட சந்திப்பின் பின்னர் அவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சிறார்கள் தொடர்பில் தேவையற்ற அபாயங்களை எதிர்நோக்க தாம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலகளை எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.