தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புதன்கிழமை பொறுப்பேற்றார்.
முன்னதாக, அந்தப் பொறுப்பில் இருந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இந்நிலையில், சுமார் 5 மாதங்கள் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவரோடு, ஆணைய உறுப்பினர் ஒருவரும் பொறுப்பேற்றதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறின.
உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014 ஜூலையில் பொறுப்பேற்ற அருண் மிஸ்ரா, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்தப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.