பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்லூப்ஸ் பாடசாலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
போதியளவு தகவல்கள் இல்லாத காரணத்தினால் இந்த சடலங்களை உரிய முறையில் அடையாளம் காண முடியவில்லை என பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பழங்குடியின சமூகங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்ற போதிலும் இதுவரையில் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
36 பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த சிறார்கள் காம்ப்லூஸ் பாடசாலையில் கல்வி கற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.