ஒன்றாரியோவில் கொவிட் கட்டுப்பாட்டு தளர்வுகள் பாதக விளைவுகைள ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக ஒன்றாரியோவில் கொவிட் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்பார்க்கும் நலன்களை தருமா என்பது சந்தேகமே என மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரி;ப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், விக்டோரியா தின அனுஸ்டிப்பினால் இந்த தொற்று எண்ணிக்கை உயர்வடைந்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.