சீனாவிற்கு எதிரான அணுகுமுறையை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பைடன் தொடர்ந்தும் அமுல்படுத்த உள்ளார்.
சீன நிறுவனங்களின் முதலீட்டை தடுக்கும் தடைகளை மேலும் நீடிப்பதற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடைகளுக்குள்ளாகியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிப்பட்டுள்ளது. புதிய தடைகளுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதியிலிருந்து சீனாவின் பிரபல கையடகக்க தொலைபேசி நிறுவனமாக ஹூவாவி நிறுவனத்திற்கும் அமெரிக்காவில் முதலீடுகளை மேற்கொள்வதற்குதடை விதிக்கப்படவுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்பட்ட குறித்த பொருளாதார தடைகள் காரணமாக சீனாவின் கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. எனினும் அமெரிக்காவின் புதிய தீர்மானத்திற்கு தான் பதிலடி வழங்க தான் தயாரென சீனா தெரிவித்துள்ளது.