Home கனடா அஸ்ட்ராசென்கா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான அறிவுறுத்தல்

அஸ்ட்ராசென்கா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான அறிவுறுத்தல்

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை முதலாவது மருந்தளவாக ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மருந்தளவு ஏற்றுதல் தொடர்பிலேயே இந்த மூன்று சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் முதல் இரண்டாவது மருந்தளவு ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் மருந்தளவாக அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் பைசர், மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது அதே அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வாரங்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டாவது மருந்தளவாக ஏற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts