கொரோனா பெருந்தொற்று பரவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும் பிரித்தனரியாவ இணைத்துள்ளது.
தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.