Home கனடா காம்லூப்ஸ் குறித்து விசாரணை நடாத்துமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் கோரிக்கை

காம்லூப்ஸ் குறித்து விசாரணை நடாத்துமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் கோரிக்கை

by Jey

காம்லூப்ஸ் பாடசாலைகளில் 215 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சட்டத்தரணிகளினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பிரதம வழக்குரைஞரிடம் கனடாவின் பதினைந்து சட்டத்தரணிகள் கூட்டாக இணைந்து விசாரணை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

கனேடிய அரசாங்கம் மற்றும் வத்திக்கான் தேவாலயம் என்பன தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல் என சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட பாடசாலையில் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

உயிரிழந்த சிறார்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் அரசாங்கத்திடமோ அல்லது தேவாலயங்களிடமோ இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts