ஒன்றாரியோவில் கொவிட் 4ம் அலையை தடுக்க வேண்டுமாயின் கூடுதலான அளவில் தடுப்பூசிகள் ஏற்றபட வேண்டுமென மருத்துவர்களும், நகரங்களின் மேயர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கொவிட் பெருந்தொற்று பரவுகை அதிகளவில் காணப்படும் அபாய வலயங்களுக்கு கூடுதல் அளவில் தடுப்பூசிக் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் கொவிட் நான்காம் அலை ஏற்படுவதனை தடுக்க முடியும் என மாகாணத்தின் நகரங்களது மேயர்களும் மருத்துவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின் போதும் ஆபத்தான வலயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமேன தெரிவித்துள்ளனர்.