கோவிட் தொடா்பான செயல்பாடுகள் மற்றும் தடுப்பூசி பதிவுக்கான ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி சோ்க்கப்பட வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது புதிதாக ஒன்பது மொழிகள் சோ்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தமிழ் வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்தும் வகையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத் துறையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலுவலா்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா். அப்போது, இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாள்களில் தமிழ் மொழியில் இந்த வசதி செயல்படுத்தப்படும்.