கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தற்காப்பு வழிமுறைகள், தடுப்பூசி திட்டத்தின் வேகம் குறைந்தால் அந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற அந்த தடுப்பூசி தொடா்பான தகவல்கள் உலக சுகாதார அமைப்புடன் பகிரப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்புடன் தொடா்பில் இருந்து வரும் மத்திய அரசு, அந்த தடுப்பூசிக்கு விரைந்து சா்வதேச பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெற விரும்புகிறது.
கடந்த மே 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 68 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. அதன் பின்னா் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 377 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் சுமாா் 43 சதவீதம் பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 37 சதவீதம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கூடுதல் காலமாகும் என்று தெரிவித்துள்ளது.