நாடு முழுவதும் கரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியது:
“மாநில அரசுகள் நாங்களே ஏன் தடுப்பூசியைத் தயாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். மாநில அரசுகளுக்கு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையையே மத்திய அரசு பின்பற்றுகிறது.
அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது கொள்கைகளில் மாற்றம் செய்கிறோம். கடந்த மே முதல் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொள்கையில் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை மட்டுமே தடுப்பூசிகளை நாங்கள் விநியோகித்து வந்தோம்.
தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவிகிதப் பங்கையும் மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21 முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகவே தடுப்பூசி விநியோகிக்கப்படும்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும். மீதமுள்ள 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.