ஒன்றாரியோவின் லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமானது திட்டமிட்ட இனக்குரோத அடிப்படையிலானது என தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் வாகனமொன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் போது, திட்டமிட்ட அடிப்படையில் இனக்குரோத நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் இந்த இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸர்h தெரிவிக்கின்றனர்.
20 வயதான இளைஞன் ஒருவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாகனத்தை மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கனடா முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.