நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் இன்று (08) யால சரணாலயத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.
பிரான்ஸ் தூதரகத்தினூடாக வெளிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, நாட்டிற்கு வருகைதந்துள்ளவர்களில் 101 கடற்படை உறுப்பினர்கள் யால சரணாலயத்திற்கும் 86 பேர் உடவலவ தேசிய சரணாலயத்திற்கும் 235 பேர் ஹபரணை பிரதேசத்திலும் சுற்றுலாவில் ஈடுபடவுள்ளனர்.
இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, சபா(F)ரி ஜீப்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பிரான்ஸ் கடற்படையின் 750 உறுப்பினர்களை ஏற்றிய 02 கப்பல்கள் நேற்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.