லண்டனில் உயிரிழந்தோருக்காக ஆயிரக் கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
லண்டன் பள்ளிவாசலுக்கு வெளியே சுமார் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்த முஸ்லிம் குடும்பத்தினருக்காக அஞ்சலி செலுத்தினர்.
சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனவெறி நோக்கில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை திட்டமிட்ட அடிப்படையில் மோதச் செய்த காரணத்தினால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் கனடா முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இனவெறித் தாக்குதல்கள், இனவெறி செயற்பாடுகள் நிஜம் எனவும் அவற்றை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
மிலேச்சதனமாக இழிவான தாக்குதலாக இந்த சம்பவத்தை கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.