ஒன்றாரியோ லண்டனில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல் ஓர் பயங்கரவா செயல் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
லண்டனில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் மீது வாகனத்தை மோதச் செய்து மேற்கொண்ட தாக்குதலில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தமை தொடர்பில் பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குரோத உணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இதனை கருத வேண்டுமென பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கொலைகளை விபத்தாக கருத முடியாது எனவும் இது பயங்கரவாத செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் பாதிக்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.