யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எனும் பெயர் எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதியுடன் நீக்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் இயங்கவுள்ளது.
வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் கற்கைகள் என்பவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்குதல், மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட கற்கைகளில் விசேட துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமான ஒரு அடிப்படையை கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் இலக்குடன் பரந்தளவிலான தொடர்புப்பட்ட கற்கைகளுடன் உரிய கற்கைநெறிகளை பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்தல் வேண்டுமென கல்வியமைச்சரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.