லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நாளை தொடங்குகிறது.
காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர் ஏற்கெனவே 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். இதனால் நியூசிலாந்து அணியில் வில் யங் இடம்பெறவுள்ளார்.