Home இந்தியா அங்கீகாரமில்லாத தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவு

அங்கீகாரமில்லாத தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவு

by admin
கரோனா தொற்று பரவலின் மத்தியில் பள்ளிகள் இணைய வகுப்புகளின் வாயிலாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை தொடக்கப் பள்ளிகள் தொடர்பான அறிவிப்பை தொடக்கக் கல்வி இயக்குநர்  வெளியிட்டுள்ளார்.
அதில் அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகளை மூட மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு உரிய விதிகளை பூர்த்தி செய்யாத அங்கீகாரமற்ற பள்ளிகளை மூடவும், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகாரமற்ற பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரித்து அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பள்ளிகள் தொடர்ந்து இயங்கினால் அப்பகுதியின் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பொறுப்பாகக் கருதப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts