ஜீ7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, பிரித்தானியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மூன் நாட்கள் நடைபெறும் ஜீ7 நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக அறிவி;க்கப்படுகின்றது.
பின்னர் நேட்டோ உச்சி மாநாட்டில் பிரதமர் ட்ரூடே பங்கேற்க உள்ளதாகவும் அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பிரதமர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.
கொவிட் பெருந்தொற்றை இல்லாதொழித்தல், உலகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல், வறிய நாடுகளின் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜீ7 நாடுகள் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
பழங்குடியின மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் நாட்டில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.