ஒன்றாரியோ லண்டனில் முஸ்லிம் குடும்பம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய நபர் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.
லண்டனில் முஸ்லிம் குடும்பம் ஒன்று வீதியில் நடந்து சென்ற வேளையில் வேண்டுமென்றே வாகனத்தை மோதச் செய்து அவர்களை படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20 வயதான நாதானில் வெல்ட்மான் என்ற இளைஞர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நான்கு கொலைக் குற்றச்சாட்டுக்களும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் இந்த இளைஞர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இனவெறித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.