Home கனடா கொவிட்டினால் குடிப்பெயர்வாளர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்

கொவிட்டினால் குடிப்பெயர்வாளர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்

by Jey

கனடாவிற்குள் குடிப்பெயர்ந்தவர்களே கொவிட்-19 நோய்த் தொற்றினால் அதிகளவில் உயிரிழக்கின்றார்கள் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொவிட் முதல் அலையினால் கனடாவில் பிறந்தவர்களைவிடவும் குடிப்பெயர்ந்தவர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குடிப்பெயர்வாளர்கள் அதிகளவில் கனடாவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறிய இடங்களில் செறிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானவர்களுக்கு கொவிட் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனேடிய சனத்தொகையுடன் ஒப்பீடு செய்யும் போது குடிப்பெயர்வாளர்களின் மரணங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

related posts