எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
14ம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடரும் என பல்வேறு சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.