லண்டன் தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தாக்குதல்தாரியின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை இனவெறித் தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பேச முடியாத ஓர் பாதகச் செயல் என தாக்குதல் சம்பவத்தை விபரித்துள்ளார்.
தாக்குதல்தாரியின் தந்தை மார்க் வால்ட்மான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இதனை விடவும் அதிகளவில் கருத்து வெளியிட விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வாறான ஆறுதல்வார்த்தைகளை சொல்வது என்பது தெரியாது தவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.