Home இலங்கை இலங்கையில் நேற்று 101 கொவிட் மரணங்கள்

இலங்கையில் நேற்று 101 கொவிட் மரணங்கள்

by Jey

இலங்கையில் நேற்றைய தினம் மொத்தமாக 101 கொவிட் நோய்த் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் பதிவான அதி கூடிய கொவிட் மரணங்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் 23 நாட்களில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கோவிட் தொற்று இலங்கையில் கண்டறியப்பட்டது முதல் பதிவான மரணங்கள் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களை ஆராயும் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முதல் 500 மரணங்கள் பதிவாவதற்கு சுமார் 343 நாட்கள் கடந்துள்ளதுடன் இரண்டாவது 500 மரணங்கள் பதிவாவதற்கு 72 நாட்கள் கடந்துள்ளன.

1001 முதல் 1500 வரையிலான கோவிட் மரணங்கள் பதிவாவதற்கு 13 நாட்கள் மட்டும் கடந்துள்ள நிலையில், 1500 முதல் 2000 வரையிலான கோவிட் மரணங்கள் பதிவாவதற்கு வெறும் 10 நாட்களே கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களைப் போல் அல்லாது தற்பொழுது நாட்டில் பல்வேறு கோவிட் புதிய திரிபுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

related posts