நீண்ட நாட்களாக கடுமையான கெடுபிடிகள் அமுல்படுத்தப்பட்டிருந்த ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் கெடுபிடிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் முதல் கட்ட கொவிட் கெடுபிடி தளர்வு இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாணத்தின் பொருளாதாரத்தை மீளத் திறக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையும், வைத்தியசாலை அனுமதி எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
திறந்த வெளியில் பத்து பேர் வரையில் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கையை வரையறுத்து, அத்தியவசியமற்ற வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.