நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை முலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயணத்தடை 14ம் திகதியின் பின்னர் நீடிக்கப்படாது எனவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.