Home இலங்கை எரிபொருள் விலையேற்றத்தினால் ஆளும் கட்சிக்குள் முரண்பாடு?

எரிபொருள் விலையேற்றத்தினால் ஆளும் கட்சிக்குள் முரண்பாடு?

by Jey

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்வது மக்களுக்கு மேலும் நெருக்கடியாக அமையும். எனவே, இதற்கான முழு பொறுப்பையும் ஏற்று, துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பில பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் சிறந்த உறவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

related posts