Home உலகம் கொவிட் பரவலை தடுக்க விசேட திட்டம் வகுக்கும் ஜி7 நாடுகள்

கொவிட் பரவலை தடுக்க விசேட திட்டம் வகுக்கும் ஜி7 நாடுகள்

by Jey

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை ஜி-7 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்;. தம்மிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறித்த நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 வைரஸ் தொற்று மீண்டும் ஒரு தடவை வருவதை தடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோன்வெல் நகரில் இடம்பெறும் ஜி- 7 கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு இன்று இடம்பெறுகிறது. இதன்போது கொவிட் தொற்றாளர்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டன.

இதற்கமைய கொவிட் தடுப்புசிகளின் உற்பத்திகளையும் 100 நாட்களுக்குள் பாரிய அளவில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜி-7 கூட்டத்ததொடரை நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஜன் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

related posts