இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீன சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு கரைப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 வயது மதிக்கத்தக்க மொஹமட் ஹமாயல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு கரைப்பகுதியிலுள்ள நெப்லஸ் நகரில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் படையினர் சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது படையினர் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.