Home கனடா கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோரை ஊக்கப்படுத்த 3 மில்லியன் பணப்பரிசை அறிவித்த மாகாணம்

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோரை ஊக்கப்படுத்த 3 மில்லியன் பணப்பரிசை அறிவித்த மாகாணம்

by Jey

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வவோரை ஊக்குவிக்கும் நோக்கில் அல்பார்ட்டா மாகாண அரசாங்கம் மூன்று மில்லியன் டொலர் பணப்பரிசை வழங்குவதாக அறிவித்துள்ளது.

லொத்தர் சீட்டிலுப்பு முறையின் கீழ் இவ்வாறு பணப்பரிசு வழங்கப்பட உள்ளதாக மாகாண முதல்வர் ஜேசன் கென்னி அறிவித்துள்ளார்.

மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு தலா ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தடுப்பூசி செலுத்துகைகக்காக தங்களை பதிவு செய்து கொள்வோர் மற்றும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் இந்த லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இந்த லொத்தர் சீட்டிலுப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நாளைய தினம் மாகாண அரசாங்கம் அறிவிக்க உள்ளது.

related posts