Home கனடா பிரம்டனில் 22 வயதான இளைஞன் நீரில் மூழ்கி பலி

பிரம்டனில் 22 வயதான இளைஞன் நீரில் மூழ்கி பலி

by Jey

பிரம்டனில் 22 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வாஸாகா கடற்கரையில் வைத்து அலை அடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அலையில் அடித்துச் செல்லப்பட்ட உடன் அவரது நண்பர்கள் 911 அவசர அழைப்பு இலத்தினை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளுக்கான உதவிகளை கோரியுள்ளனர்.

உலங்கு வானூர்தி ஒன்றின் மூலம் இளைஞர் தேடப்பட்டதாகவும் எந்த இடத்தில் அடித்துச் செல்லப்பட்டாரோ அதே இடத்தில் குறித்த இளைஞர் சலனமற்று கிடப்பதனை கண்டு அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலன்றி குறித்த 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

related posts