றொரன்டோவில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு இந்த படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காப்ரோவில் நேற்றிரவு இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
ஹாமில்டனில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன, றொரன்டோவின் டிரித்வேயில் மற்றுமொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.