லண்டன் இனவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அண்மையில் ஒன்றாரியோ லண்டனில் முஸ்லிம் குடும்பம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த குடும்பத்தைச் செர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திட்டமிட்ட அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
20 வயதான நதானில் வால்ட்மன் என்ற நபருக்கு எதிராக நீதிமன்றில் தீவிரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்ட்மன் இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னதாக வால்ட்மனுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே சுமத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.