Home இலங்கை இலங்கையில் கொவிட் அச்சுறுத்தல் குறையவில்லை

இலங்கையில் கொவிட் அச்சுறுத்தல் குறையவில்லை

by Jey

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு குறைவு காணப்பட்ட போதிலும் கொரோனா அச்சுறுத்தல் நிலை குறைவடையவில்லையென இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உலகம் பூராகவும் துரிதமாக பரவி வரும் கொரோனா டெல்டா வகையானது அபாயகரமானதாக காணப்படுவதனால் அதனை நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவரும் வைத்திய நிபுணருமான டொக்டர் பத்மா குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

“அண்மையில் கிடைத்த தகவல்களுக்கு அமைய இலங்கையில் தற்போது காணப்படுகின்ற எல்பா வகையானது, இல்லாவிட்டால் யு.கேயில் பரவி வரும் வைரசே காணப்படுகிறது. இந்தியாவில் மாபெரும் தொற்றாக டெல்டா வகையைச் சேர்ந்த வைரஸ் பரவியது. இது மிகவும் வேகமாக பரவி பாரிய உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியது. தற்போது இங்கிலாந்தில் டெல்டா வகையைச் சேர்ந்த வைரஸ் பரவுகிறது. அமெரிக்காவிலும் பரவி வருகிறது. இவ்வாறு புதிய வகையான வைரஸ்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இவ்வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கான உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

இதேவேளை அரச வைத்திய உத்தியோகத்தர்களின் சங்கம்; கருத்துதெரிவிக்கையில் தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு காணப்படுவதால் அந்நிலையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

“தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை மக்கள் முறையாகவும் பொறுப்புடனும் செயற்படுத்தினால் கொரோன தொற்று பரவலை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறோம். எனினும் கொரோன மரணங்கள் பதிவாகுவதில் நாம் எதிர்பாத்த குறைவு இன்னும் ஏற்படவில்லை. மரண எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தடுப்பூசி வழங்கும் பணியையும் தொற்றாளர்களை கண்காணிக்கும் பணியையும் முறையாகவும் செயற்திறனுடனும் முன்னெடுக்க் வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் சுகாதார அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.”

 

related posts