ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் டெல்டா திரிபு நோய்த் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மிகவும் வேகமாகமாக பரவக்கூடிய வீரியம் கொண்ட இந்தியாவில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொவிட் திரிபு நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் இந்த புதிய திரிபு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என மாகாணத்தின் துணை பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் பார்பரா யாவீ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவதாகவும் இதன் மூலம் நோய்த் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் டொக்டர் யாவீ குறிப்பிட்டுள்ளார்.