கொழும்பு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தில் கப்பலின் பயண தகவல் மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
VDR சாதனத்தின் மேலதிக தரவு பகுப்பாய்வுக்கான அதன் தாய் நிறுவனத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், MV X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த இலங்கை பிரதிநிதியை கைது செய்வதற்கு குற்றப்புலாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த கப்பலின் கெப்டன், நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.