பல தசாப்தகாலங்களாக இடம்பெறும் சர்ச்சைக்குரிய மோதல் நிலையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க கலந்துரையாடல் நாளை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்குவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் ஆகும். எவ்வாறெனினும் கலந்துரையாடல் தொடர்பில் இரு தரப்பிலும் எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.