பழங்குடியின மாணவர்களின் சடலங்களை தேடுவதற்காக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
வதிவிட பாடசாலைகளில் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களின் சடலங்கள் உண்டா என்பது குறித்து தேடுதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
பழங்குடியின வதிவிடப்பாடசாலை வளாகங்களில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக மாகாண முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் பத்து மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
அண்மையில் காம்ப்லூஸ் பழங்குடியின வதிவிடப்பாடசாலை வளாகத்திலிருந்து சுமார் 214 சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள பின்னணியில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு வரையில் ஒன்றாரியோ மாகாணத்தில் வதிவிடப் பாடசாலைகள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.