நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்டமாக ,ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் இன்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.