எரிசக்தி வள அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுப்பற்ற விதத்தில் எண்ணெய் விலை உயர்வை அதிகரித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கொண்டு வரவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு இன்று(16) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டார்.