கனடாவில் இரண்டாவாது நாளாகவும் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை ஆயிரத்தை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 805 ஆக பதிவாகியுள்ளதுடன் நேற்றைய தினம் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 783 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையுடன் பூர்த்தியான ஏழு நாட்களில் கொவிட் தொற்று உறுதியாளர்களின் சராசரி எண்ணிக்கை 1305 ஆக பதிவாகியுள்ளது.
கனடாவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள தகுதியானவர்களில் 74 வீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவையேனும் ஏற்றிக் கொண்டுள்ளனர்.