25 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேலுக்கும்; பாலஸ்தீனத்திற்கும் இடையில் மீண்டும்மோதல்கள் உருவாகியுள்ளன. காசா பகுதியை இலக்கு வைத்துஇஸ்ரேல் விமான தாக்குதல்களை நடாத்தியதையடுத்தே மோதல் உருவாகியது.
இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை நடாத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
பாலஸ்தீன் பயங்கரவாத குழு தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களை வானுக்கு விடுவதனால் அதற்கு பதில் தாக்குதல் வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெருசலத்தில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்;பை தெரிவிக்கும் வகையில் இவ்வாறு தீப்பற்றக்கூடிய பலூன்களை வானில் பறக்க விட பாலஸ்தீன கிளர்ச்சி குழுக்கள் நடவடிக்கை எடுத்தன.
இவ்வாறான 20 பல}ன்களை காணக்கிடைத்ததாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்தஞாயிறு புதிய பிரதமராக தெரிவாகிய பிரதமர் நப்தாலி பெனடின் தலைமையிலான இஸ்ரேலின் புதியஅரசு முகம் கொடுத்த முதலாவது மோதல் இதுவாகும்.