தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு ஆதரவளிக்கப்படும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.
அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார் என இந்திய தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.