வாட்டர்லூவில் டெல்டா கொவிட் திரிபின் பரவுகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்டா தொற்றுப் பரவுகையின் வீரியம் அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் கொவிட் பரவுகையை கட்டுப்படுத்தாவிட்டால் திட்டமிட்டமாறு தளர்வுகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபினாலேயே அண்மைய நாட்களில் அதிகளவான கொவிட் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.