Home உலகம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது – ரஸ்யா

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது – ரஸ்யா

by Jey

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் தலைவர்களுக்கு இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சற்று முன்னர் நிறைவடைந்தது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் முதலில் ரஸ்ய ஜனாதிபதியே ஊடகங்களுக்கு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒருவரை ஒருவர் பரஸ்பர புரிந்துகொள்வதற்கு இரண்டு தரப்புக்களும் அவகாசம் வழங்கியிருந்ததாக புட்டின் தனது சுட்டிக்காட்டியுள்ளார்.
மொஸ்கோவிற்கான அமெரிக்க தூதுவர் மற்றும் வொஷிங்டனுக்கான ரஸ்ய தூதுவரும் அவர்களது பணிகளை முன்னெடுப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சைபர் பாதுகாப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் பல்வேறு விடயங்களை கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அணுவாயுத விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளும் சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கூட்டம் 80 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்த போதிலும் இரு நாட்டு தலைவர்களும் சுமார் 93 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இரு நாடுகளினதும் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமையும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts