Home இலங்கை இலங்கையிலும் டெல்டா திரிபின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது

இலங்கையிலும் டெல்டா திரிபின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது

by Jey

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான ஐவர் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி திரிபானது இலங்கையில் தற்போது பரவிவரும் B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது எனவும், கொவிட் – 19 தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்குகூட இது தொற்றக்கூடும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

related posts