ஒன்றாரியோ மாகாணத்தில் நாள் ஒன்றில் சுமார் 200,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னர் கடந்த 10ம் திகதி 199951 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.
நாள் தோறும் தடுப்பூசி ஏற்றும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
நாள் தோறும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் அதிகரிப்பு மற்றும் குறைவு வீழ்ச்சியாகும் நிலைமையை அவதானிக்க முடிவதாககத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், மாகாணத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.